
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால் போலீசார் பணிகளில் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இரவு பணியில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் பகல் நேரத்தில் பணிக்கு அழைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் 10 க்கு மேற்பட்ட போலீசார் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அயல் பணிக்கும் அனுப்பப்படுகின்றனர். இதனால் ஸ்டேஷன் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
நகர்களில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அதிகளவில் பாதிக்கின்றனர். இவற்றை ஒழுங்குப்படுத்த போலீசார் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாக உள்ளது. இதோடு அதிக அளவில் போக்குவரத்து விதி மீறல்களும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போதுமான அளவு போக்குவரத்து போலீசாரும் இல்லை மாவட்டத்தில் உள்ள புறக்காவல் நிலையங்களில் போலீசார் இல்லாமல் காலியாக உள்ளது.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது குறித்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்