
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . நள்ளிரவு நேரத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு பார்த்தபோது அருகில் நிறுத்தி இருந்த பைக்கும் சேர்ந்து எரிந்தது. உடனே குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இதில் ஷெட்டில் கட்டிப் போட்டிருந்த வளர்ப்பு நாய் தப்பி ஓட முடியாமல் கருகி பலியானது. இது குறித்து ஜெகன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.