
திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(37) இவர் டிராக்டரில் ஜல்லி கல்லை ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு – நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள வேகத்தடையை கடக்க முயன்றார் அப்போது டிராக்டர் குலுங்கியதால் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரின் பின்பக்க டயர் தெய்வேந்திரன் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.
மேற்படி சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்