
கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காடு பகுதிகளில் அனுமதி இன்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட 29 நபர்களுக்கு அபராதம் விதித்த கன்னிவாடி வனத்துறையினர்., 1,30,500 ரூபாய் அபரதம் விதித்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கன்னிவாடியில் மேற்கு தொடர்ச்சி மலையின் கீழ் மலைப்பகுதியான கன்னிவாடி மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் காட்டு மாடுகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு விலங்குகள் அடிக்கடி மலை அடிவார பகுதிக்கு வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதும், பொதுமக்களை தாக்குவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே கன்னிவாடி மலை பகுதியை பாதுகாக்கப்பட மலையாக அப்பகுதி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று கன்னிவாடி பிளாக் 1 காப்புக்காடு பகுதிகளில் வனசரகர் குமரேசன், வன பாதுகாவலர் திலகராஜா மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சிலர் மலையேற்ற பயிற்சி ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனைக் கண்ட வனத்துறையினர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையினரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் மீது வனசரக பலஇன வன குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களை கன்னிவாடி வனசரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டவர்கள் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29 நபர்கள் கன்னிவாடி மலை பகுதிக்கு வந்து மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 29 நபர்களுக்கும் தல 4,500 ரூபாய் விதம் மொத்தம் 1,30,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.