
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் கடந்த வியாழன் வெள்ளி சனி ஞாயிறு வரை மொத்தம் நான்கு நாட்களுக்களாக மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிஉள்ளது பொதுமக்கள்வேதனை!
இதே அவல நிலைதான் கொடைக்கானல் பண்ணைக்காடு மேல்மலை கீழ்மலை பகுதிகளிலும் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு மலை கிராமங்களிலும் இருண்ட நிலையில் தான் உள்ளது
தற்போது ஆடி மாதம் என்பதால் அதிகமாக காற்று அடிப்பதால் மர கிளைகள் மின் கம்பிகளில் விழுவதால் அதிகமாக மின்தடை ஏற்படுகிறது மின் கம்பிகளில் விழும் மர கிளைகளை வெட்டி மின்சாரம் தங்கு தடை இன்றி வழங்குமாறு கேட்டுக் கொண்டோம் மின்சாரத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தாண்டிக்குடி பொதுமக்கள் சார்பாகவும் பழனி சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் மலை கிராமங்களில் உள்ள மின்சார விநியோக குறைபாடுகளை தடுக்க நிரந்தர தீர்வினை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.