
பெண் பரபரப்பு புகார்
ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி..!
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக 10 லட்ச ரூபாய் மோசடி செய்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வடக்கு தெருவை சேர்ந்த சரோஜா விவசாயி தொழில் செய்து வருகிறார். பனிரெண்டாம் வகுப்பு படித்துள்ள சரோஜாவுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிரதீப் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தனது உறவினர் என்றும், பலருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் பிரதீப் தினமும் தன் வீட்டிற்கு வந்து பணம் ரெடி பண்ணியாச்சா என்று தொல்லை செய்தார். நானும் அவர் கூறுவது உண்மை என்று நம்பி நகையை அடகு வைத்தும் என் கணவர் தொழிலுக்கு வைத்திருந்த பணத்தையும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளார்.
ஒரு மாத காலத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அப்படி வேலை வாங்கி தரவில்லை என்றால் பணத்தை திருப்பி தருவதாகவும் கூறி நம்பிக்கைக்கு காசோலையும் கொடுத்துள்ளார். பிரதீப் மீது சந்தேகம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் பணத்தை திருப்பி கேட்டபோது தர முடியாது, என் அக்கா கணவர் கண்ணன் மூன்று கொலை செய்துள்ளார், நாங்கள் பெரிய ரவுடி பணத்தை திருப்பி கேட்டால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார் பிரதீப் . இதேபோன்று என் கணவரிடமும் பிரதீப் வீட்டை விற்பனை செய்வதாக பல லட்சம் மோசடி செய்து உள்ளார். நாங்கள் என்னவென்று தெரியாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். பணத்தை மீட்டு தர வேண்டும், இல்லையென்றால் சாக தான் வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதேபோன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மீது அடுக்கடுக்கான அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் எழும்பி வந்துள்ள இந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .