
தூக்கத்தில் வந்து சொன்ன ஆவி..!
ஒரு வருஷத்துக்கு முன்னாடி செத்து போன அண்ணனோட ஆவி வந்து சொன்னதால காத்திருந்து பழிக்கு பழி தீர்த்த தம்பி. கொன்று மணலில்
புதைக்கப்பட்ட சகோதரர்கள்… நள்ளிரவில் அரங்கேறிய கொடூர கொலைகள்…
இன்றைய குற்றம் பேசும் கதையில் புதிய குற்றத்தை பற்றியும், அதன் பின்னணியையும் அலசுவோம்…
தூத்துக்குடி மாவட்டம் கீழ பண்டுகரையை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரோட மகன் அருள்ராஜை காணவில்லைன்னு குடும்பமே தேடுது. அருள் ராஜுக்கு விபத்து ஒன்னுல கண் பார்வ தெரியாம போயிருக்கு.. எங்க போனானோ, என்ன ஆச்சோன்னு அக்கம்பக்கத்தினர் பேசிக்கறாங்க. கண் தெரியாதவன் எங்க போயிருப்பான்னு ஒவ்வொருத்தரும் புது கதையை கட்ட ஆரம்பிக்கிறாங்க.
இரவு வீட்டில் இருந்த அருள்ராஜ் திடீரென காணாமல் போனதால பதறிய சின்னத்துரையும், அவரது வீட்டாரும் கீழ பண்டுகரை காவல்நிலையத்துல புகார் அளிச்சி இருக்காங்க. 27 ஆம் தேதி நள்ளிரவுல இருந்து அருள்ராஜ காணவில்லை என தெர்மல்நகர் காவல் நிலையத்துல புகார் கொடுத்து இருக்காங்க. அருளராஜ காணவில்லை என்று ஒரு பக்கம் போலீசாரும், இன்னொரு பக்கம் குடும்பத்தாரும் தேடி வந்து இருக்காங்க.
இந்த நிலையில காணாம போன அந்த 27ம் தேதி என்ன நடந்ததுன்னு போலீசார் விசாரிக்க தொடங்கி இருக்காங்க. அப்போது, அருள்ராஜ் காணாமல் போன இரவு அவரோட வீட்டுக்கு முன்னாடி 4, 5 பேர் போதையில தகராறு செஞ்சி இருக்காங்க. அப்போது, அருள்ராஜும்,அ வரோட அக்கா மாரியம்மாவும் அதட்டி கேட்டு இருக்காங்க. இதனால அங்க தகராறு செஞ்ச ரிதன், அவருடன் இருந்த சதீஷ், முனீஸ்வரன், வில்வராஜ், காதர்மீரானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கு.
இந்த சம்பவத்த தெரிஞ்சிக்கிட்ட போலீசாரோட விசாரணை ரிதன் பக்கம் திரும்பி இருக்கு. ஏற்கெனவே அடிக்கடி ரிதனுக்கும், அருள்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததா சொல்லப்பட்டது. போலீசாரோட முழு கவனமும் ரிதன் மேல விழுந்ததால, அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணயை நடத்தி இருக்காங்க. அப்ப்போது அருள்ராஜ அடிச்சி வச்சி இருக்கறதா சொல்லி இருக்கான். அதன் நம்பி ரிதன் சொன்ன பண்டுகர இடத்துக்கு போலீஸ் போயிருக்கு.
வெறும் மணல் காடாக இருந்த அந்த இடத்துல மணலுக்குள்ள இருந்து ஒரு கை மட்டும் வெளியே தெரிஞ்சி இருக்கு. அதை பார்த்த போலீஸ் உடனே அந்த இடத்த தோண்ட ஆரம்பிச்சி இருக்காங்க. அருள்ராஜ அங்க கொன்னு புதைச்சிட்டாங்கன்னு அதுவரைக்கும் நம்பிகிட்டு இருந்த போலீஸ்க்கு அங்கு வேற ஒரு டிவிஸ்ட் காத்துட்டு இருந்து இருக்கு. அங்க தோண்டி பார்த்தபோது, அந்த இடத்துல அருள்ராஜுக்கு பதிலா அவரோட சகோதரர் மாரி பாண்டி உடல் இருந்து இருக்கு. அதை பார்த்து குடும்பத்தாரும், ஊராரும் திடுக்கிட்டு இருக்காங்க.
அதுவரைக்கும் அருள்ராஜ மட்டுமே தேடி வந்த எல்லாருக்கும் அப்போது தான் மாரிபாண்டி காணாமல் போனதும் தெரிய வந்து இருக்கு. மாரிபாண்டி உடல் இருந்த இடத்துல இன்னும் கொஞ்சம் தோண்டி பார்தத்துல அங்க அருள்ராஜ் உடல் இருந்து இருக்கு. அண்ணன், தம்பிய அங்கேயே கொன்னு போட்டு இருக்காங்காங்க. உடனே ரிதன் மேல சந்தேகப்பட்ட போலீஸ் நேரா அவர போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு போயி விசாரிச்சி இருக்காங்க. அதுல பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்து இருக்கு.
ரிதன், அருள்ராஜ், மாரிபாண்டி, ரிதன் சகோதரர் கார்த்திக் எல்லாரும் சொந்தக்காரர்கள். இவங்க அந்த ஊர்ல கள்ளச்சந்தையில மது விற்று வந்ததாகவும் சொல்லப்படுது. இந்த நிலையில தான் கடந்த ஆண்டு நவம்பர்ல கார்த்திக் தற்கொலை பண்ணி இருக்காரு. இந்த தற்கொலைக்கு அருள்ராஜும், அவரது சகோதரர் மாரிபாண்டியும் தான் காரணம்னு ரிதன் சொல்லிட்டு வந்து இருக்கான்.
இந்த நிலையில தான், தன்னோட அண்ணன் ஆவி வந்து சொன்னதால அண்ணன், தம்பி ரெண்டு பேரையும் இரவோட இரவா தூக்கிட்டு போயி பண்டுக்கர பகுதியில வச்சி கொலப்பண்ணி புதைச்சதா சொல்லி அதிர்ச்சி அளிச்சி இருக்கான்.
இதையெல்லாம் கேட்ட போலீசார் தொடர்ந்து ரிதன், சங்கர், காதர் மீரானிடம் விசாரணையை நடத்தி வறாங்க.
கடந்த ஆண்டு தற்கொலை பண்ணிக்கிட்ட அண்ணனோட மரணத்துக்கு பழித்தீர்க்கும் விதமாக அரங்கேறி இருக்கும் இந்த இரட்டை கொலை தூத்துக்குடியை அலறச் செய்துள்ளது.