
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலையில் 3ம் ஆண்டு படித்து வந்தார். திவ்யா டி.பி.சத்திரம் பகுதியில் வாடகைக்கு தனியாக அறை எடுத்து தங்கி மருத்துவக் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த சூழலில் திவ்யாவுக்கு தட்சணாமூர்த்தி என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவர, முதலில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர், இரு குடும்பத்தாரும் கலந்துபேசி, படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பதாக சொல்லப்படுகிறது.
முதுகலை மருத்துவக்கல்லூரி படித்து வந்த திவ்யா, செயல்முறை வகுப்புக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு பிற்பகலில் தனது அறைக்கு திரும்பிய இரவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் தட்சணாமூர்த்தி திவ்யாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். தீண்ட நேரமாக திவ்யா செல்போன் அழைப்பை எடுக்காததால், சந்தேகமடைந்த தட்சணாமூர்த்தி, திவ்யாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு அவர் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து தட்சணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் விசாரனை நடத்திய டி.பி.சத்திரம் போலீசார், திவ்யாவின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திவ்யாவின் மரணத்துக்கு பணிச்சுமை ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திவ்யாவின் நண்பர்களிடமும், அவர் பணிபுரிந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.