
தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின கொடியேற்றத்தின் போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் கொடி ஏற்ற கே.பாலகிருஷ்ணன் தொடங்கியபோது அவர் ஏற்றிய கொடியானது தலைகீழாக ஏற்றப்பட்டது. அப்போது அங்கு இருந்த நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே கொடியை சரி செய்து மீண்டும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த சம்பவம் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.