
செங்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அல்வா வழங்கிய திமுகவினர்.
நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் 6,7,8 உள்ளிட்ட வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது இந்த முகாமிற்கு அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து மனு அளித்து வந்த நிலையில் திமுகவினர் சார்பில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அல்வா மற்றும் மிக்சர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது.
இனிப்பு வழங்கும் பட்சத்தில் திமுகவினர் அளித்த அல்வா தற்போது அப்பகுதியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.