
திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது
மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த முத்துமாணிக்கம் மகன் சுரேஷ்குமார்(24), தனசேகரன் மகன் அமிதேஷ் கார்த்திக்(20), பாண்டிகுமார் மகன் சஞ்சய்(19) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த 3 பேர் மீதும் மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது