
திருவண்ணாமலை, கீழநாத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தனியாக பிரித்து கொடுத்தவர் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி என்றும் அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றும், சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து திட்டங்களும் ஏழைகளுக்காகவும் எளிய நடுத்தர குடும்பத்திற்காகவும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் என்றும், அதேபோலவே தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்காக என்று விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, கல்லூரி பயிலும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் பெண்களை நோக்கி தான் செயல் படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்மைப் பெற்றவர் ஒரு தாய் அதனால் தான் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறினார்
காவல்துறையில் பெண்களும் பணியாற்ற வேண்டுமென, எங்களுக்கு இடமளித்தவரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றும், அவருடைய எண்ணங்கள் எல்லாம் கிராமத்தை நோக்கியும் நடுத்தர மக்கள் நோக்கியும் திட்டங்களை தீட்டுவதிலேயே குறியாக இருந்தார் என்றும், அதனால் தான் அவருக்கு நாம் பிறந்தநாள் விழா எடுப்பதாகவும், அவருடைய தந்தையை போலவே தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார் என்றும் அவர் கூறினார்.
அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுகவை திட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார் என்றும், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொய்யான தகவல்களை கூறிவிட்டு செல்வதாகவும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சூரிய குளத்தை சீரமைக்கவில்லை என அப்பட்டமான பொய்யை பேசிவிட்டு சென்றதாகவும் தற்போது இந்த பணிகள் 5 கோடியே 85 லட்சம் மதிப்பின் நடைபெற்று வருவதாகவும், திருவண்ணாமலை மாட வீதிகளை சிமெண்ட் சாலையாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தற்போதைய முதலமைச்சர் அறிவித்ததை போல தற்போது 34 கோடி மதிப்பில் முதல் கட்ட முடிவடைந்து இரண்டாம் கட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏதோ இந்த பணிகள் இரண்டு வருட காலமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று வருவதாகவும் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
மேலும் திருவண்ணாமல அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறையில் இருந்து தாங்கள் தான் மீட்டோம் என அப்பட்டமான பொய்யை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறி சென்றுள்ளார் என்றும், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன் திருவண்ணாமலை தொல்லியல் துறையில் இருந்து அண்ணாமலையார் கோவிலை மீட்டு தர வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோரிக்கை விடுத்ததன் பேரில் நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு திருவண்ணாமலை , அண்ணாமலையார் கோயில் தொல்லியல் துறையிடமிருந்து மீட்டு தந்தவரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் என்றும் ஆனால் இதை எதையுமே கூறாமல் பொய்யான தகவலை எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி அவர்கள் கூறி வருகிறார்கள் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசினால் அவருக்கு தக்க பதிலடி என்னால் கொடுக்க முடியும் என்றும், ஆகவே மக்களுக்கான ஆட்சியை என்றுமே திமுக நடத்தி வரும் என்றும் அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உரையாற்றினார்.