
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் பள்ளியை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி நீதிமன்ற ஆணையர் வழக்கறிஞர் உள்பட பத்து வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு சீல் வைக்க வந்தனர் .
அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியின் மாடிக்குச் சென்று குதித்து விடுவதாக மிரட்டல் கொடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று மணிநேர பரபரப்புக்கு பின்னர் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே பள்ளி நிர்வாகி மாணவர்களை தூண்டி விட்டதாக கூறப்படுகிறது.