
மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல்(46) என்பவரின் இ-ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்ததால் பரபரப்பு.
கடந்த வாரம் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக தங்கவேலின் மனைவி சென்றுள்ளார். அப்போது ரேஷன் கார்டில் தனது மனைவியின் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்திருக்கிறது. அவர்கள் இன்னும் அப்டேட் செய்யப்பட்ட கார்டை வாங்கவில்லை. ஆனால் இ-கார்டில் இப்படி மதுபாட்டில் படம் இருந்துள்ளது அதனை பார்த்து நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பினர் என்றும் கூறினார்.