செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும், கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் தென்காசி மற்றும் செங்கோட்டையில் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி யானை பாலம் சிக்னல், மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காசி விஸ்வநாதர் கோவில், சுவாமி சன்னதி வீதி, ஜெமினி லாலா கார்னர், முத்தாரம்மன் கோவில் கூலக்கடை பஜார் வழியாக மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது. செங்கோட்டையில் ஓம் காளி திடலில் துவங்கி வம்பலந்தான் முக்கு, வல்லம் ரோடு காமராஜர் காலனி, கே. சி. ரோடு, பம்புஹவுஸ் ரோடு, சன் ரைஸ் கார்னர், ஜவஹர்லால் நேரு ரோடு வழியாக செங்கோட்டை காவல் நிலையத்தில் கொடி அணிவகுப்பு முடிவு பெற்றது. இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் உட்பட 100 நபர்கள் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button