
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை சேர்ந்தவர் ராதிகா( 31). இவர் இன்று குமராபுரம் வடக்கு விளை காலனி தெரு பகுதியில் குழு வசூலுக்கு பைக்கில் சென்ற பொழுது தெருவில் இருந்த நாய்கள் ராதிகாவை கடிக்க துரத்தியதாக கூறப்படுகிறது. அப்பொழுது நாயிடம் இருந்து தப்பிக்க பைக்கில் சென்ற பொழுது அருகில் உள்ள கழிவு நீர் ஓடையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்து துடிதுடித்தவுடன் உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடையநல்லூர் பகுதியில் தொடர்ந்து நாய்கள் குழந்தைகளையும் பெரியவர்களையும் துரத்தி துரத்தி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.