க்ரைம்சினிமா

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம், தனி உரிமையை பாதுகாக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலியான இணைய தளத்தை தொடங்கி அவரது புகைப்படம், ஆயத்த ஆடைகளை போன்றவற்றை விற்பனை செய்வதாகவும் அந்த போலி இணைய தளத்தை முடக்க வேண்டும் எனக்கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தேஜஸ் கரியா முன்பு விசாரணக்கு வந்தது, அப்போது ஐஸ்வர்யா ராய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி இணையதளத்தில் ஐஸ்வர்யா ராயை நிறுவனத்தின் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இணைய தளத்துக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள. இது அவரின் privacy.யை பாதிப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் இணையதள முகவரியை நீக்க வேண்டும் இல்லாவிட்டால் கூகுள் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு தனித்தனி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு 2026 ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button