
ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து .
சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 780 கிலோ கஞ்சாவினை நீதிமன்ற உத்தரவின் படி அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் K.பவானீஸ்வரி தலைமையில் இன்று (09.09.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள G.J.Multiclave India pvt ltd., உள்ள insulator -ல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் அதிகாரிகள் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகத்தில் 2025ம் ஆண்டில் இதுவரை 264 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஏழு இலட்சம் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.