கோக்கு மாக்கு
Trending

மகாவீர் ஜெயந்தியன்று திறந்துவைத்து இறைச்சி கடைகள் வழக்கம்போல இயங்கியது -கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம்

File Picture

மகாவீர் ஜெயந்தி 31/03/2026 அன்று வருகிறது. மகாவீர் ஜெயந்தி என்பது ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் இறுதி தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. ஜைனர்கள், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சித்திரை மாதமான திரயோதசி திதியில், மகாவீரரின் பிறந்தநாளை மிகுந்த ஆடம்பரத்துடன் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மகாவீரரின் பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாவீரர் தனது வாழ்க்கை முறையில் கடைப்பிடித்த ஜைன மத சித்தாந்தத்திற்கு போற்றும் வகையிலும் , அவரது அறிவுறுத்தல்களின்படியும், அவரது பிறந்தநாளில் அனைத்து வகையான இறைச்சிக் கூடங்களுக்கும் மற்றும் இறைச்சி தொடர்பான அனைத்து விற்பனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் தினம், மகாவீர் ஜெயந்தி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று நாட்களில் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிப்பது ஒரு வழக்கமாகும்.

அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் மாநகராட்சி, ஓட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல் மற்றும் வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் இறைச்சி மற்றும் இறைச்சி சார்ந்த பொருட்களின் விற்பனையை உள்ளாட்சி அமைப்புகள் தடுத்து நிறுத்தவில்லை. இது செய்தி ஊடகங்களில் வெளியான போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனால் இந்த ஆண்டு மகாவீர் ஜெயதியான இன்று திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இறைச்சிக்கடைகள் வழக்கம் போல இயங்கின

மாநகராட்சி அதிகாரிகள் தான் இப்படி என்றால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இயங்கிவரும் தொண்டு நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது 2008- ம் ஆண்டு 13 பேர் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டு காவல்துறைக்கு நிகரான காக்கி சீருடையும் வழங்கி பெயரளவில் செயல்படும் அமைப்பாகவே இந்த மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கம் உள்ளது என விலங்குகள் னால ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

File Picture

தேர்தல் சட்ட விதிகள் நடைமுறையில் உள்ள நிலையிலும் , இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஜைன மதத்தின் 24-வது மற்றும் இறுதி தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த நாளைக்க்கொண்டாடி வரும் வேளையில் சட்ட விதிகளை மீறி இறைச்சிக்கடைகள் திறந்து விற்பனை செய்யும் அளவிற்கு திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகளும் , மாவட்ட நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகளும் மோசமாக உள்ளன பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button