கோக்கு மாக்கு
Trending

சொந்த கட்சியின் MLA- வை குறை சொல்லி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வீரா’ சாமிநாதன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கூம்பூர், புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது புதூர் பகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அப்பகுதி பெண்கள் வேட்பாளரை சூழ்ந்து எந்த ஒரு அடிப்படை வசதியும் கடந்த 5 ஆண்டுகளில் செய்து தரவில்லை என குறை கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட வேட்பாளர் வீரா.சாமிநாதன் தங்களது வீட்டில் சாப்பாடு, சாம்பார், ரசம், பொரியல், எல்லாம் தினந்தோறும் ஒரே மாதிரி சமைத்துக் கொள்ள முடியாது.

அதே போல் இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற்றப்பட வில்லை என லிஸ்ட் போட்டு காட்டியதுடன் அதை முழுவதும் நான் சீரமைத்து தருகிறேன் என்று குறை சொல்லி தனக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தார்.

இவருடைய இந்த சர்ச்சை பேச்சால் நடப்பு எம்.எல்.ஏ வாக உள்ள காந்திராஜனின் ஆதரவாளர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். மேலும் திமுக வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு திமுக எம்.எல்.ஏ காந்திராஜன் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய இந்த மோதல் போக்கு வேடசந்தூர் தொகுதியில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கழக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button