
10 வருடம் எம்எல்ஏவாகவும்,, ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த சீனிவாசன் தொகுதிக்காக என்ன செய்தார் – நீங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என பட்டியல் போட முடியுமா திமுக வேட்பாளர் செந்தில்குமார் கேள்வி
எதிர்க்கட்சி வேட்பாளர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சனம் செய்வது தவிர, மக்கள் மத்தியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை
திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் பிரச்சாரத்தின் போது பேச்சு
தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்ற உள்ளது.
வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில் தற்பொழுது வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் செந்தில் குமார் இன்று 07.04.26 ரவுண்ட் ரோடு, ரங்கநாயகி நகர், அபிராமி குப்பம், லட்சுமி சுந்தரம் காலனி, அரசன் நகர், திருநகர், அண்ணா நகர், குமரன்திருநகர், கோபால் நகர், பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் பேனில் இருந்தவாறு பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதை, ஆராத்தி எடுத்து, வெடி வெடித்து அமோக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் :- 10 வருடங்கள் எம்எல்ஏவாகவும், ஐந்து வருடங்கள் அமைச்சராக இருந்த அதிமுக வேட்பாளர் சீனிவாசன் தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்.
பத்தாண்டு காலத்தை வீணடித்து விட்டு மக்கள் மத்தியில் வந்து பாவ மன்னிப்பு கேட்பது போல நான் யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணவில்லை நான் யாருக்கும் நல்லது செய்யவில்லை எந்த கெட்டதும் செய்யவில்லை. எம் எல் ஏ என்பவர் ஊருக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் ஊரின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
நான் பழனி சட்டமன்ற தொகுதியில் 10 வருடங்கள் எம்எல்ஏவாக இருந்தேன் மக்களுக்கு என்ன செய்தேன் என நான் பட்டியலிடுகின்றேன், அதேபோல் சீனிவாசன் பட்டியலிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
அதை விடுத்து விட்டு எங்களைப் போன்ற வேட்பாளர்களை எதிர்க்கட்சித் தலைவர்களை கொச்சையாக விமர்சனம் செய்வது இது போன்ற மோசமாக பேசி மக்கள் மத்தியில் வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மக்கள் மத்தியில் அவர் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
திண்டுக்கல் ஒரு வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டிய அவசியமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தலைநகரான திண்டுக்கலை வளர்ச்சி நோக்கி பயணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது
தமிழகத்தில் பல மாநகராட்சிகள் உள்ளது திண்டுக்கல் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி தி கேன்சல் செய்யப்பட்டது. எம்எல்ஏவாக வந்தவுடன் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
திண்டுக்கல் நகருக்கு ஆத்தூர், காவேரி ஆகியவற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கூடுதலாக தண்ணீர் தேவைப்படுவதால் வைகை அணையில் இருந்து 700 கோடி செலவில் திண்டுக்கல், ஆத்தூர் நிலக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.என பேசினார்.