கரூர் 04-09-2020
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் முத்தம்பட்டி அருகே பாப்பிரெட்டியப்பட்டி பிரிவு அருகில் காவிரி கூட்டுகுடிநீர் குழாய் இன்று அதிகாலை உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் விணாகி வருகிறது.
கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி கரையில் இருந்து மாமரத்தூப்பட்டி வழியாக கடவூர் தரகம்பட்டி வழியாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டகுடிநீர் குழாய் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் மதிப்புள்ள குடி நீர் சாலைகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது .
மேலும் அருகாமையில் உள்ள வயல் வெளிகளில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடக்கிறது.இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.விரைவாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.