கரூர் 04-09-2020
கரூர் கிருஷ்ணராயபுரம் லாலாபேட்டை புகலூர் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை
இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.1500 முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.1000 அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.2000- க்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1,000-க்கும் வாங்கி சென்றனர்.
இந்த கடந்த 6 மாத்திற்கு முன்பு இளங்கால் வெள்ளைக் கொடி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.4ஆயிரத்திற்கும், முதிகால் வெள்ளக்கொடி வெற்றிலை ரூ.2,500-க்கும் அதேபோல் இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.3000 ஆயிரத்திற்கும், முதிகால் கற்பூரி வெற்றிலை ரூ.1500 ஆயிரத்திற்கும் கொள்முதல் செய்பட்டநிலையில்
வெற்றிலை உற்பத்தி அதிகரித்திருந்தாலும் விலை குறைந்து விற்கப்படுவதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து திருமணம் கோயில் விழாக்கள் பேருந்து இயக்கப்படாது போன்ற காரணங்களே இந்த விலை குறைவுக்கு காரணம் என விவசாயி கிருஷ்ணராயபுரம் வெற்றிலை விவசாயி ஜெகதீசன் தெரிவித்தார்.
அதேபோல கிருஷ்ணராயபுரம் கோவக்குளம் பகுதியை சேர்ந்த வெற்றிலை விவசாயி ரமேஷ் தெரிவிக்கையில்:
கொரோனா ஊரடங்கு காரணமாக வெற்றிலை விவசாயத்தில் செய்யப்பட்ட முதலீடு ஆட்கள் கூலி உள்ளிட்ட மூலதன செலவு கொள்முதல் விலையில் அடங்காமல் இருப்பதால் பெரும் நஷ்டத்தில் வெற்றிலை விவசாயம் இருப்பதாக கவலை தெரிவித்தார்.