கரூர் – 04.09.2020
கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலையை பட்டாசு வெடித்து கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஐ பி எஸ் அதிகாரியாக பணியாற்றி தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு தற்போது பாஜகவில் இணைந்து தமிழக பாஜக துணை தலைவராக பதவி ஏற்றுள்ளவர் அண்ணாமலை.
இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த தொட்டம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக வந்த அவருக்கு கரூர் மாவட்ட எல்லையான வைரமடையில் கரூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் பட்டாசுகள் வெடித்தும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் அறிமுகமாகி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.அப்போது பேசிய அண்ணாமலை, கரூர் பி.ஜே.பி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் அதிகமானோரை பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
பி.ஜே.பி வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாத வளர்ச்சியாக போய் கொண்டிருக்கிறது. 2021 தேர்தலில் அது தெரியும். கரூர் மாவட்டத்தில் நிச்சயமாக 2,3 சீட்டுகள் ஜெயிக்க சந்தர்பம் இருக்கு, இங்கு இருக்கின்ற எழுச்சியை அப்படியே தேர்தல் களத்தில் இறக்கினால் போதும், பொறுப்பாளர்கள் வேலை செய்தால் போதும். பிரதமர் செய்யக் கூடிய திட்டங்கள் கடை கோடி தமிழர்களுக்கும் தெரிய வேண்டும் என்கிறார். அது இவர்களால் மட்டுமே முடியும்.
இதை பார்க்கும் போது பி.ஜே.பி ஆரோக்கியமாக அற்புதமாக வளர்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு சாட்சி என்றார். பேட்டி – அண்ணாமலை, பாஜக மாநில துணை தலைவர்.