கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக வந்த மாணவ மாணவிகள் பெற்றோர் அதிர்ச்சி
கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி பெற்ற கலைக் கல்லூரி ஆகும். 2020 21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தல் முடிவுற்று கடந்த ஒரு வார காலமாக 17 இளங்கலை பாட பிரிவுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வந்தது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு பிரிவுகளுக்கு நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி நாளான இன்று பொதுப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது .
இதில் இன்றுசுமார் 400 க்கும் மேற்பட்டமாணவ மாணவிகள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் சாய்ந்த மரத்தினை இரண்டு வாரத்திற்கு மேலாக அகற்றாமல் வளாகத்தில் கிடந்துள்ளது. மேலும் 8 தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டிகள் இருந்தும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற வளாகம் மற்றும் கல்லூரி அலுவலக வளாகம் ஆகிய இரண்டிலும் தண்ணீர் இல்லாமல் பெற்றோரும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதால் கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக வந்த மாணவ மாணவிகள் பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
இது குறித்து அறிய கல்லூரி முதல்வர் கவுசல்யா அவர்களை தொடர்புகொள்ள முயன்றோம் ஆனால் நமது அழைப்பை ஏற்கவில்லை .
கரூர் செய்தியாளர்
எஸ் .கண்ணன்