கோக்கு மாக்கு

இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் 07-09-2020

கரூரில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியில் கடந்த 19 -10 -2013 அன்று அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணிடம் நகையை கொள்ளை அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் . கரூர் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளான தாந்தோணிமலை பகுதியை சேர்ந்த வெற்றி என்ற சிவசுப்பிரமணியம், கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவரைம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்மந்தமான வழக்கு விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா தளர்வு காரணமாக இன்று கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழக்கம்போல செயல்பட்டது . இன்று வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் தலா 1000 ரூபாய் அபராதம் விதித்து மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிகலா அதிரடி தீர்ப்பு வழங்கினார் .

வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற விசாரணையில் உரிய ஆதரங்க திரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவலர்களுக்கு கரூர் எஸ்பி பி.பகலவன் வாழ்த்து தெரிவித்து உள்ளார் .

கரூர் செய்தியாளர், எஸ். கண்ணன்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button