கோக்கு மாக்கு

நெல்லை தொழிலதிபர் வீட்டில் சோதனை மிளும் அரசியல் கட்சி!

நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்

    திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பிள்ளையார்நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயராகவன்(எ) சரவணன்(45) ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜ்குமார்(45) ஆகிய இருவரும் ஜெயராகவன் வீடு மற்றும் வீட்டின் கார் செட் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு மதுபான வகைகள் , இராணுவ மற்றும் துணை இராணுவ படையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முன்னாள்…


  • திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்

    திண்டுக்கல் R.M.காலனி சிவாஜிகணேசன் 2-வது தெருவில் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கேரளாவில் அமீபிக் வைரஸ் பரவும் நிலையில் திண்டுக்கல்லில் புதுவகை தொற்றுநோய் உருவாகும் சூழல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் இந்த பிரச்சனை தொடர்ச்சியாக நடைபெறுவதால் இதற்கு ஒரு முடிவே இல்லையா என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். இதே நிலைதான் திண்டுக்கல் மாநகராட்சி உட்பட்ட அனைத்து வார்டுகளும் சாக்கடை…


  • பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று

    புறாக்களின் படைப்பில் பயணிபுறாவுக்கு தனி இடமுண்டு. அதன் அழகும் பல்வேறு வண்ணமும் ஒவ்வொருவரையும் கவரும். வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள் தான் பயணிபுறாக்கள் எனப்படும் காட்டுபுறாக்கள். இந்தப் புறாக்கள் கூட்டமாக வானில் பறக்க தொடங்கினால் அந்தக் கண்கவர் ஊர்வலம் முடிய பல மணி நேரம் ஆகும். 1873 – ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி மெக்ஸிகன் நகரில் வான்வெளியில் காலை 7.30 மணிக்கு தொடங்கிய புறா ஊர்வலம் முடிவதற்கு…


Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button