கரூர் 08-09-2020
கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்து கொண்டவர்களில் 54 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சிகிச்சை பெறுவோருக்கு மொத்த எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரூர் மாவட்டத்தில் :
மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1899.
இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கை 29.
சிகிச்சை முடிந்து வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 1485.
தற்போது சிகிச்சை பெறுவோருக்கு மொத்த எண்ணிக்கை 385
கரூர் செய்தியாளர்எஸ்.கண்ணன்