கோக்கு மாக்கு

மத்திய அரசின் கிசான் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரிக்கை

Prof.M.P.Muthusamy

கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கிசான் திட்டம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது இதன் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 2000 வீதம் மொத்தம் ஆண்டுக்கு ரூ 6000 வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பாரத பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானது .
இதனை அடுத்து தமிழக அரசு தமிழகம் முழுவதும் நடைபெற்ற முறைகேடு குறித்து அனைத்து மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 157 ஊராட்சிகளில் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 1500க்கும் மேற்பட்டோர் முறைகேடாக பதிவு செய்து பயன் பெற்று வந்ததாக கண்டறியப்பட்டது .
தற்போது இதில் முதல் கட்டமாக 310 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து 12 லட்சத்து 40 ஆயிரம்  ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது .


இதுகுறித்து தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ள கோரிக்கையில் இந்திய கணசங்கம் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் பி முத்துசாமி:
ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக மக்கள் வரிப்பணத்தில் கொண்டுவரும் திட்டங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடப்பது உள்ளபடியே அதிர்ச்சி அளிக்கிறது.
 பல்வேறு மாவட்டங்களில் போலியாக விவசாயிகளாக பதிவு செய்ய சான்றிதழ் வழங்கிய கிராம நிர்வாக அதிகாரி முதல் வேளாண் நிர்வாக உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெறாமல் சான்றிதழ் வழங்கி இருக்க முடியாது.
 எனவே இதில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களை கைது செய்வதோடு அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசு இதில் மெத்தனம் காட்டினால் இந்திய கணசங்கம் கட்சியின் விவசாயி அணி சார்பில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button