கொரொனா ஊரடங்கு நிவாரணத் தொகை ரூ 2000 வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கக்கோரி கரூர் மாவட்ட சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூர் வெண்ணைமலை தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சிஐடியூ கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு சிஐடியு கரூர் மாவட்ட செயலாளர் சி.முருகேசன் மற்றும் தண்டபாணி சி.ஆர்.ராஜாமுகமது, பாலசுப்பிரமணி, கந்தசாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை ரூ 2,000 விரைவாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
தொழிலாளர் பதிவு ஆன்லைன் முறையை முறைப்படுத்த வேண்டும்
கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறைக்கு நிரந்தர உதவி ஆணையரை நியமன படுத்த வேண்டும்
கொரோனா காலத்தில் கல்வி உதவித்தொகை முதியோர் பென்சன் உள்ளிட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எஸ்.கண்ணன்
கரூர் செய்தியாளர்