கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு பகுதியில் நாள் முழுவதும் கேம் விளையாடிய சிறுவனை தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை
கரூர் அருகே பசுபதிபாளையம் ஏவிபி நகர் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் முத்துமாணிக்கம் ராமாயி தம்பதியினரின் இளைய மகன் ராஜேஷ் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் நாள் முழுவதும் செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்..
இதனை ராஜேஷ்வின் அம்மா ராமாயி கண்டிக்கவே நேற்று காலை 8.45 மணி அளவில் பெற்றோர் வேலைக்கு வெளியே சென்ற நிலையில் தனது அக்கா விசித்ராவின் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கரூர் பசுபதிபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கேம் விளையாட கூடாது என கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கில் அதிகரிக்கும் குழந்தை மரணங்கள் பள்ளி கல்லுரி ஆன்லைன் வகுப்புகள் , நீட் தேர்வு , கேம் விளையாட தடை போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு குழந்தைகளின் மன நலம் பாதிக்கப்பட்டு சமீப காலமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களின் மரணங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது .
இதனை கவனத்தில் கொள்ளுமா அரசு?