கரூர் 15-09-2020
கரூர் மணல்மேடு தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் சர்வீஸ் லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இன்று காலை 9 மணிக்கு கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக பெண் ஊழியர் கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பார்சல் சர்வீஸ் லாரியை டிரைவர் மீது அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அரசு பணி கிடைத்து கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.