கரூரில், இளநீர் கடையில் வியாபாரம் செய்து வந்த போது மனைவி முன்பு பைக்கில் வந்த இருவர் கணவரை வெட்டி விட்டு தப்பி ஓட்டம். கரூரில் பரபரப்பான சாலையில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கரூர் சின்ன ஆண்டான்கோவில் கோவில் மேட்டு தெருவைச் சேர்ந்த குணசேகரன் கரூர் கோவை சாலையில் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை குணசேகரன் அவரது மனைவியும் இளநீர் மொத்தமாக வாங்குவதற்கு அதிகாலையில் பொள்ளாச்சி சென்று விட்டனர். இதனால், இளநீர் கடையை குணசேகரன் மகன் கிருஷ்ணமூர்த்தியும் ( 27) இவரது மனைவி ஷஸ்மிதா (23) ஆகிய இருவரும் பார்த்துக் கொண்டனர்.
அப்போது, பைக்கில் வந்த இருவர் இளநீர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை மனைவி ஷஸ்மிதா கண் எதிரே தலை மற்றும் கைகளில் வெட்டி விட்டு வந்த வேகத்தில் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த கிருஷ்ணமூர்த்தியை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கில் வந்து வெட்டி சென்ற நபர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கரூரில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
எஸ். கண்ணன் கரூர் செய்தியாளர்.