கரூர் 22.9.2020
இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டமசோதா நகலை எரித்து தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
கரூர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நடராஜன் ஊடகதுறை செயலாளர் லோகநாதன், தாந்தோனி நகர செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.