கரூர் 23.09.2020 ஊதியக் குறைப்பு வேலை மறுப்பு , மிக மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வீஸ்ஈஸ்வரன்,விசிக மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர்,கரூர் நகர செயலாளர் முரளி என்கிற பாலசிங்கம், கரூர் நகர துணை செயலாளர் மணி, இனாம் கரூர் நகர துணை செயலாளர் பரமன், கரூர் நகர பொருளாளர் ரகுமான், ஜெயச்சந்திரன் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன், ஏஐசிசிடியூ மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜிபிஎஸ் வடிவேலன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எஸ் கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர். |