கரூரில் பேருந்து நிலையத்தில் சிற்றுந்து(Small Bus) சேவையை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று கரூர் பேருந்து நிலையத்தில் துவக்கிவைத்தார் . நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
வழித்தடம் – 1
கரூர் to புலியூர் (வழி) லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, காந்திகிராமம் ஆகிய வழித்தடத்திலும்,
வழித்தடம் – 2
கரூர் to புலியூர் (வழி) பழைய அரசு மருத்துவமனை, ரயில்நிலையம், பசுபதிபாளையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காந்திகிராமம் ஆகிய வழித்தடத்திலும் புதிய நகர வழித்தட சிற்றுந்து இயக்கப்பட்டுகின்றன .
முன்னதாக சிற்றுந்து சேவையை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு த.அன்பழகன் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் சிற்றுந்து சேவை (Small Bus) சென்னைக்கு அடுத்தபடியாக கரூர் பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . முன்னதாக முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் தமிழகம் முழுவதும் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டது .
எஸ் கண்ணன் கரூர் மாவட்ட செய்தியாளர்.