குளித்தலை சார் ஆட்சியரின் ஒருதலை பட்ச நடவடிக்கை காரணமாக சமூக நலத் திட்ட வட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கட்டாயப் பணி இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று 11:30 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் மதியம் 3 மணியளவில் முடிவுக்கு வந்தது.
முன்னதாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் நடத்திய 20 நிமிட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மங்கள பாண்டியன் வேண்டுகோளுக்கிணங்க கலைந்து சென்றனர்.
முற்றுகை போராட்டம் காரண கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
S.கண்ணன் M.A.B.Ed.,
கரூர் மாவட்ட செய்தியாளர் ,