கரூர் 21-10-2020
உ.பியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு கரூரில் ஆதித் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்,உத்திரபிரதேசத்தில் தொடர்ச்சியாக தலித் மக்கள் படுகொலை செய்வதற்கு காரணமான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர்.
மேலும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேசியக் கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது. என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஆதித் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சுப இளங்கோவன் துணைப் பொதுச் செயலாளர் அறிவழகன் ஆதித்தமிழர் பேரவை மாநில தொழிற்சங்க தலைவர் துரை அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் .
ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் டைகர் ராஜீவ்காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தனபால், பட்டியல் இன பேரவை நிறுவனத் தலைவர் தலித் கே.ஆனந்தராஜ் உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
எஸ்.கண்ணன்கரூர் செய்தியாளர்.