கரூரில் அரசு புறம்போக்கு இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்திய தனி நபரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் அருகே உள்ள பால்ராஜ்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகரில் வசிக்கும் 300 க்கும் அதிகமான குடியிருப்புகளின் குடிநீர் வசதிக்காக அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 8 சென்ட் ஒதுக்கப்பட்டடு, நேற்று பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவர், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து, இன்று அந்தப் பகுதி மக்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் திரண்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி சம்மந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, பொதுமக்களை பிரச்னைக்குரிய இடத்தை பார்வையிட அழைத்து சென்றனர்.
இதனால் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது