தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் அமைப்பு தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கலைவாணர் கூட்டரங்கில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார் கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தீர்மானங்களை நிறைவேற்றினார் அமைப்பு செயலாளர் சுந்தர்ராஜ் தணிக்கையாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர் ரத்தினவேல் மாவட்ட இணைச் செயலாளர் மாரிமுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஞானவேல் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் வகையில் 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்படும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டு மன்றக் கூட்டத்தை வேளாண் இணை இயக்குனர் கரூர் அவர்கள் உடனே நடத்த வேண்டும், வட்டார வளர்ச்சி உதவி வேளாண் அலுவலகத்தில் தற்பொழுது புதிதாக விவசாயிகள் பயிர் எண்ணிக்கை பராமரிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மற்றும் விதை உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள உதவி அலுவலர்கள் காலியாக உள்ள கிடங்கு மேலாளர் பணி பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது இப்பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிக்கும் சம்பந்தமில்லாத இதை கருத்தில் கொண்டு கிடங்கு மேலாளர் பணியை ரத்து செய்ய சென்னை வேளாண் ஆணையாளர் அவர்களை கேட்டுக்கொள்வது என 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக அமைப்பு தினத்தை ஒட்டி சங்கத்தின் கொடியினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக வளாகத்தில் ஏற்றி வைத்து தாந்தோணி வட்டார துணை வேளாண் அலுவலர் கருப்பையா நன்றி உரை கூறினார்.
எஸ் கண்ணன் கரூர் செய்தியாளர்.