தமிழ்நாடு வருவாய்துறை கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்றக்கோரி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி எம் எஸ் திருமண மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ஆர்.திருமலைவாசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு எஸ்.ரவி மாநில பொதுச்செயலாளர் வரவேற்புரையாற்றினார்.சங்க தீர்மானங்களில் மாநில கௌரவத் தலைவர் மாரியப்பன் விளக்கிப் பேசினார்.
கரூர் மாவட்ட நிர்வாகிகள் கரூர் மாவட்ட தலைவர் கி.சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், அரவக்குறிச்சி வட்டத் தலைவர் எம்.குப்புசாமி, வட்ட பொருளாளர் எஸ். ஷேக் அப்துல் காதர் மற்றும் வட்ட துணைத் தலைவர் கதிர்வேல், சகாயம்மாள், செல்வராஜ், புகலூர் வட்ட நிர்வாகி வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் வட்ட செயலாளர் விசாலாட்சி புகலூர் வட்டார துணைத்தலைவர் கிருஷ்ணன், ஜெகநாதன், ஜெயசித்ரா, சின்னத்தம்பி உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் இருந்து அனைத்து மாவட்ட மாநில நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் திருமலைவாசன்:
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் தமிழக அரசுக்கு வைத்து வரும் கோரிக்கை காலமுறை ஊதியம் வழங்கி தமிழக அரசு அரசு ஊழியர்களை போல பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதே தற்போது கரூரில் நடைபெற்ற இந்த மாநில செயற்குழுவில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் .
அடுத்த கட்டமாக நவம்பர் ஜனவரி மாதங்களில் மூன்று கட்ட போராட்டங்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மேற்கொள்ள உள்ளேன் .
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வருவாய் ஊழியர்கள் உயிரிழந்தால் ரூபாய் 25 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
எஸ்.கண்ணன்
கரூர் செய்தியாளர்