சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் செல்வக்கனி (74), டேனியல் (65). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை செல்வக்கனி வீட்டிற்கு சென்ற டேனியல் திடீரென அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்கனி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர். டேனியலுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. செல்வகனிக்கு ஒரு மகள் உள்ளதாகவும், அவர் சிவந்திபுரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Read Next
2 days ago
போதை கும்பல் தலைவனை கடத்திய வழக்கில் விடுவிக்க கோரி பிரபல ரவுடி ராக்கெட் ராஜா தாக்கல் செய்த மனு சேலம் கோர்ட்டில் தள்ளுபடி
2 days ago
அயன்சிங்கம்பட்டி பகுதியில் மீண்டும் சுற்றித்திரியும் கரடி
2 days ago
விக்கிரமசிங்கபுரம் ப்ளீச்சிங் பவுடர் வாங்க 35 லட்சம் நிதி ஒதுக்கீடு? கொந்தளித்த கவுன்சிலர்கள்
3 days ago
இடுக்கியை கலக்கும் தமிழக கலெக்டர் விக்னேஷ்வரி ஐஏஎஸ்
3 days ago
மொத்தம் 50000 கோடி சொத்து… அமலாக்க துறை வலையில் கே.என். நேரு..
3 days ago
பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் கைது
3 days ago
இனி பயங்கரவாதிகள் ஊடுருவல் உடனடியாக தெரிந்துவிடும்
3 days ago
பிரசவத்திற்கு 5000 ரூபாய் லஞ்சம் கேட்ட செவிலியர் – தர மறுத்ததால் ஆபாசமாக திட்டிய வீடியோ வைரல்
3 days ago
*ரேஷன் கடையில் வயதான முதியவரின் கைரேகை பதியவில்லை : எனவே அரிசியும் கிடைக்கவில்லை : ரேஷன் கடை ஊழியர் என்ன செய்வார்? என்ற ஆதங்கத்தில் முதியவர் பேசும் ஆடியோ திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வைரல்*
3 days ago
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குழியில் மண்ணை கொட்டி நிரப்பிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்..
Related Articles
Check Also
Close