கரூர் ரயில்வே ஜங்ஷன் முதல் சேலம் பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை வரை அம்மா சாலை திட்டம் நடைபெற்று வரும் நிலையில் அந்த வழியாக செல்லும் பாலம், மின்சார கம்பி, மலை நீர் வாய்கால் கட்டும் பணிகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் கிழக்கு ஒன்றியம், நெரூர் வடபாகம் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பசுமை வீடுகள் கட்டும் பணியினை மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி எஸ்.கவிதா அவர்களின் தலைமையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்“
கரூர் ஒன்றியம்
காதப்பாறை ஊராட்சி வெண்ணமலை முருகன் கோவில் அருகிலுள்ள சுற்றுச்சுவர், தெரு விளக்கு, பூங்கா மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிகளை மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி எஸ் கவிதா அவர்களின் தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
S.கண்ணன் M.A.B.Ed.,
கரூர் மாவட்ட செய்தியாளர் .