கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு 34 பேர் கைது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி சாமானிய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சண்முகம் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டு விவசாய சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக பேசினார்கள்.
மாலை 5 மணி வரை நீடித்த காத்திருப்பு போராட்டத்தினை தொடரக்கூடாது என போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்தனர் இருப்பினும் போராட்டக் குழுவினர் கலந்து செல்ல மறுத்ததால் சுமார் 5 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட சுயாட்சி இந்தியா, மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 34பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் புலி ஈழம் உதயா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கரூர் நகர செயலாளர் முரளி, கரூர் நகர பொருளாளர் ரகுமான், உள்ளிட்ட ஏராளமான விசிக வினர் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்
மாலை 5 மணி வரை நீடித்த காத்திருப்பு போராட்டத்தினை தொடரக்கூடாது என போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்தனர் இருப்பினும் போராட்டக் குழுவினர் கலந்து செல்ல மறுத்ததால் சுமார் 5 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட சுயாட்சி இந்தியா, மக்கள் அதிகாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 34பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் புலி ஈழம் உதயா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன், கரூர் நகர செயலாளர் முரளி, கரூர் நகர பொருளாளர் ரகுமான், உள்ளிட்ட ஏராளமான விசிகவினர் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.
எஸ்.கண்ணன் M.A.B.Ed.,
கரூர் செய்தியாளர்.