கோக்கு மாக்கு

கரூர் வாங்கல் பகுதியில் விவசாயிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்


கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ராகுல்காந்தி கரூர் அருகே உள்ள வாங்கல் மாரிகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள விவசாய தென்னந்தோப்பு பகுதியில் விவசாயிகள் சந்திப்பு மேற்கொண்டார். 
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கரூர் காங்கிரஸ் எம்பி செல்வி ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 விவசாயிகளிடம் ராகுல் காந்தி பேசியது; மத்தியில் ஆளும் மோடி அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது மோடியின் ஆட்சி காலத்தில் விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் மிக கடினமாக உள்ளது இதனால் விவசாயிகளின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.


புதுடெல்லியில் தற்போது நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் அதில் உள்ள கஷ்டங்களை நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் புதிய வேளாண் சட்டத்திருத்தங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் நிறுவனம் பணம் விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை எனில் விவசாயிகள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது இரண்டாவது மண்டி என்ற அமைப்பையே ஒழிக்கவேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது மூன்றாவது பணம் இருப்பவர்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம் போன்ற மூன்று அம்சங்கள் வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என எடுத்துரைத்தார் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நாம் உண்ணும் உணவுக்கு கூட அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஜிஎஸ்டி ஆல் உருவாகியுள்ளது.  தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடல் மேற்கொண்ட ராகுல் காந்தி விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்  இதில் ஒரு விவசாயி பேசுகையில்;
 ஆங்கிலேயர்கள் 1885 இல் பயன்படுத்திய தந்தை என்ற சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்த கிறார்கள்.
 இதன் மூலம் கேஸ் குழாய் பதித்து, எரிவாயு குழாய் பதிப்பு,  உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இதே நிலையை மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிப்பதாக விவசாயி ஒருவர் ராகுல் காந்தியிடம் பேசினார்.
இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி வேளாண்மை குறித்து பேசிய விவசாயி பாராட்டி மத்திய வேளாண் அமைச்சரை விட நீங்கள் சிறந்த வகையில் விவசாயத்தை நிலையைப் புரிந்து வைத்திருக்கிறார் இந்த விவசாயி என்று கூறி பாராட்டினார்.

தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்பொழுது 100 நாள் வேலை திட்டம் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது அதுவும் வறுமையில் இருக்கக்கூடியவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கும் வகையில் செயல்பட்டு வந்தது.
 மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என பதிலளித்தார் ராகுல்காந்தி.

S.Kannan Karur District Reporter

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button