மயான வசதி வேண்டி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கோவக்குளம் கிராம மக்கள்
கரூர் கிருஷ்ணராயபுரம் ஒன்றியதிற்குட்பட்ட கோவக்குளம்,பழைய செயங்கொண்டம் ,M.புதுப்பட்டி கடவூர் ஒன்றியம் ராஜலிங்கபுரம் கிராமங்களில் உட்பட்ட பட்டியல் இன மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் ஏற்கனவே இருந்த தகரகொட்டகை பழுதடைந்துள்ளது.மேலும் மழை காலங்களில் ஈமச்சடங்கு செய்யாமலும் தண்ணிர் குளம் போல் இருப்பதால் மிகவும் சிரமமாக இருக்கிறது ஆகவே எங்களுக்கு சிமெண்ட்டால் ஆன மயான மேடை அமைத்து தர வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது இதில் பொ. மகாமுணி (ஏ)வன்னியரசு மாவட்ட அமைப்பாளர் தலைமையில் சு.கார்த்திக் கிளைச் செயலாளர் கோவக்குளம் , ப.ஜெ.புரம் மொ.பிரபாகரன் பேரூர் துணை செயலாளர் பொன்னுசாமி சரத்குமார் முற்போக்கு மாணவர் கழக அமைப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
S.Kannan Karur Reporter