இந்திய தொழில் கூட்டமைப்பு (CII))சார்பில் ரூ20 லட்சம் மதிப்பிலான நடமாடும் ஆக்சிசன் பேருந்தினை தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேவிடம் வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை சமுதாயக் கூடத்தில் தயாராகிவரும் 156 ஆக்சிசன் படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மற்றும் உபகரணங்கள் வாங்க இந்திய தொழில் கூட்டமைப்பினர் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழில் முனைவோர் சார்பாக ஏசியன் பேரிக்ஸ், ஹோம் டெக்ஸ்டைல், அரவிந்த் ஏ டிரேடர்ஸ், சிந்தசிஸ் டெக்ஸ்டைல், அட்லஸ் எக்ஸ்போர்ட்ஸ், சாரதி எக்ஸ்போர்ட்ஸ், வெண்ணிலா எக்ஸ்போர்ட்ஸ், ஏசியன் பேரிக்ஸ்,போர் சீசன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து ரூ 2 கோடியே 80 லட்சம் நிதியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் முத்துசெல்வன், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் மாவட்ட தலைவர் புஷ்பராஜன் துணைத்தலைவர் வெங்கட்ராமன், யூத் இந்தியா தலைவர் வெங்கட்ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.