கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் 7.5 லட்சம் மதிப்பில் கொரோனா மருத்துவ சிகிச்சை அளிக்க 10ஆக்சிசன் கான்சென்ரேட்டர்களை தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு அமலாக்க ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் வடநேரேவிடம் வழங்கினார்.
கடந்த வாரம் மே 17 ம் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சார்பில் ரூ 21லட்சம் மதிப்பீட்டில் சுமார் 30 கான்சென்ரேட்டர்கள் கருவிகள் வழங்கப்பட்டது.
தற்போது 10 கான்சென்ரேட்டர்கள் வழங்கியதுடன் மொத்தம் 40கான்சென்ரேட்டர்களை வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.