மே 30ஆம் தேதி ஈரோடு திருப்பூர் கோவை மாவட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தமிழக முதல்வர் கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து கொரோனா சிகிச்சைப் பிரிவில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் go back Stalin ஹேஸ டேக் ஒன்று ட்ரெண்ட் ஆனது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் மேற்கு மண்டலத்தில் கடும் பின்னடைவை சந்தித்த திமுக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் பாஜகவினர் சிலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கரூர் மக்களவை உறுப்பினர் செல்வி ஜோதிமணி மு.க.ஸ்டாலின் இங்கே – பிரதமர் மோடி எங்கே என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.