தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன சமுதாயக் கூடத்தில் 152 ஆக்சிசன் படுக்கைகள் மற்றும் 48 ஆக்சிசன் அல்லாத படுக்கைகள் என 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அதிகாரிகள், திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் நொய்யல் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.